சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக அசாமில் 7 குழந்தைகள் உட்பட 24 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கைது

By செய்திப்பிரிவு

அசாமில் கடந்த 2 நாட்களில் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக7 குழந்தைகள் உட்பட 24 ரோஹிங் கியா முஸ்லிம்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

மியான்மரில் கடந்த 2017-ல் நடந்த வன்முறை காரணமாக ஏராளமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறி வங்க தேசத்துக்குள் அகதிகளாக நுழைந்தனர். அவர்கள் வங்கதேச எல்லை அருகில் உள்ள காக்ஸ்பஜார் பகுதியில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அவ்வப்போது வேலை தேடி இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயல்வதும் அவர்களை கைது செய்வதும் வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், அசாமின் கரிம்கஞ்ச் மாவட்டம் பதார்பூரில் கடந்த 24-ம் தேதி சில்சர்-அகர்தலா ரயிலில் ஏற முயன்ற 6 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 15 ரோஹிங்கியா முஸ்லிம்களை அரசு ரயில்வே போலீஸார் (ஜிஆர்பி) கைது செய்தனர். இவர்கள் அனைவரிடமும் முறையானஆவணங்கள் எதுவும் இல்லாததால், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுபோல, குவாஹாட்டி ரயில் நிலையத்தில் 3 பெண்கள், ஒரு குழந்தை உட்பட 9 ரோஹிங்கியா முஸ்லிம்கள் நேற்று காலையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் போலிஅடையாள அட்டை இருந்ததாக ரயில்வே போலீஸார் தெரிவித்து உள்ளனர்.

மத்திய உள் துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் கூறும்போது, “உரியபயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் நுழையும் வெளிநாட்டினர் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என கருதப்படுவர். இதுபோல பயணஆவணம் காலாவதியான பிறகும் இங்கு தங்கியிருப்போர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

33 mins ago

சுற்றுச்சூழல்

43 mins ago

இந்தியா

46 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

38 mins ago

விளையாட்டு

59 mins ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்