தொற்றினால் உயிரிழந்தோருக்கு வேளான் கடன் தள்ளுபடி: கர்நாடக அமைச்சர் தகவல்

By இரா.வினோத்

கர்நாடக கூட்டுறவுத் துறை அமைச்சர் சோமசேகர் பெங்களூருவில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக விவசாயிகளும் கூலி தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குடும்பத்துக்காக பணிக்கு சென்று சம்பாதித்த தாய், தந்தை உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் தொற்றுக்கு பலியானதால் ஒட்டுமொத்த குடும்பமும் மோசமான நிலைக்குதள்ளப்பட்டுள்ளது. அவர்களின் நலனை கருத்தில் கொண்டு கர்நாடகாவில் பிபிஎல் அட்டைதாரர் (வறுமை கோட்டுக்கு கீழேவாழ்வோருக்கான ரேஷன் அட்டை) குடும்பத்தில் கரோனாவுக்கு பலியானோருக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்குவதாக முதல்வர் எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து கரோனா தொற்றினால் பலியான விவசாயிகள் பெற்றுள்ள வேளான் கடனையும் தள்ளுபடி செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

கர்நாடகாவில் 2020-21 ஆம்நிதி ஆண்டில் 25.67 லட்சம் விவசாயிகள் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் ரூ. 17 ஆயிரத்து 108 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதில் கடன் பெற்ற விவசாயிகளில் 10,187 பேர் தொற்றினால் உயிரி ழந்துள்ளனர்.

எனவே அவர்களின் குடும்பத்தின் நிதி சுமையை குறைக்கும் வகையில் இறந்த விவசாயிகள் பெற்ற ரூ.79.47 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். இதற் கான அறிவிப்பை முதல்வர் எடியூரப்பா ஓரிரு தினங்களில் வெளியிடுவார். இவ்வாறு சோம சேகர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

12 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

23 mins ago

வாழ்வியல்

14 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

49 mins ago

சினிமா

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்