சியாச்சினில் பனிச்சரிவு: அதிகாரி உட்பட 10 ராணுவ வீரர்கள் மாயம்

By ஐஏஎன்எஸ்

ஜம்மு-காஷ்மீரின் லடாக் பிராந்தி யத்தில் உள்ள சியாச்சின் பனிமலை யில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டதில் ஒரு அதிகாரி உட்பட 10 இந்திய ராணுவ வீரர்கள் காணாமல் போயுள் ளனர். அவர்கள் அனைவரும் பனிச் சரிவில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப் படுவதால் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

உலகின் மிக உயர்ந்த போர்க்களமான சியாச்சின் பனிமலையில் இந்திய ராணுவ வீரர்கள் இரவு, பகல் பாராமல் எல்லை காக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 19 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இந்த பனிமலையில் தற்போது பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களில் ஒரு அதிகாரி உட்பட 10 ராணுவ வீரர்கள் காணாமல் போயுள்ளனர். அவர்கள் அனைவரும் பனிச்சரிவில் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப் படுகிறது.

இதையடுத்து விமானப்படையின் ஹெலிகாப்டர் மற்றும் ராணுவ வீரர்களைக் கொண்டு அங்கு தேடுதல், மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட் டுள்ளன. இந்த தகவலை ராணுவ செய்தி தொடர்பாளரான கர்னல் எஸ்.டி.கோஸ்வாமி உறுதி செய்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

42 mins ago

இந்தியா

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

வணிகம்

11 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

4 hours ago

கல்வி

3 hours ago

மேலும்