கேரளா, மகாராஷ்டிராவில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா தொற்று; மத்திய குழு ஆய்வு தீவிரம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள கேரளா, மகாராஷ்டிர மாநிலங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த பிப்ரவரி முதல் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவத் தொடங்கியது. பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வந்தது.

மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தொற்றுப் பரவல் படிப்படியாக குறைந்தது. அதேநேரத்தில், நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் சில மாநிலங்களில் மட்டும் கரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கேரளா, மகாராஷ்டிரா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதையடுத்து அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை நடத்தி ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்தது.

அதன்படி சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மத்தியக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். தலா 2 பேர் கொண்ட இந்தக் குழுவில் மருத்துவர், பொது சுகாதார நிபுணர் இடம் பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீண் பவார் தெரிவித்துள்ளதாவது:
கரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ள கேரளா, மகாராஷ்டிர மாநிலங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

கரோனா பரிசோதனை, சிகிச்சை முறைகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தக் குழு கண்காணிக்கும். மருத்துவமனைகளில் படுக்கைகள் இருப்பு, ஆம்புலன்ஸ், வென்டிலேட்டர், மருத்துவ ஆக்ஸிஜன் இருப்பு குறித்து இந்த குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

மாநில அரசுக்கு தேவையான அறிவுரைகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளையும் இந்தக் குழுவினர் வழங்கி வருகின்றனர். இந்த குழுவினர் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை செய்து வருகிறார். இந்த மாநிலங்களில் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

49 mins ago

இந்தியா

57 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்