விரைவாக மீண்டு வருகிறது இந்திய பொருளாதாரம்: சிஐஐ

By செய்திப்பிரிவு

கரோனா 2-வது அலை பரவல் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகள் தற்போது தளர்த்தப்பட்டு வருகின்றன. இதனால் முடங்கிய பொருளாதாரம் விரைவாக மீண்டு வருவதாக இந்தியத் தொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ) நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொழில் துறையைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளில் (சிஇஓ) 60 சதவீதம் பேர் கரோனா முதல் அலையால் ஏற்பட்ட பாதிப்பைவிட 2-வது அலையில் விரைவான மீட்சி தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக பொருள் விற்பனை அதிகரித்து வருவதாகதெரிவித்துள்ளனர். நாட்டில் உள்ள 119 பெரிய நிறுவனங்களைச் சேர்ந்த சிஇஓ-க்கள் 2-ம் கட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் ஏற்பட்ட பாதிப்பு மிகக் குறைவு என தெரிவித் துள்ளனர். முதலாவது அலையை விட 2-வதுஅலையின்போது அதிக அளவில் நோய் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதாக சிஐஐ இயக்குநர் ஜெனரல் சந்திரஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்தப்படுவதால் 2-வது அலைதீவிரமடையாமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வும் இதனால் நுகர்வோர் நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2-வது அலையால் முடங்கிப் போன தொழில் நடவடிக்கைகளில் தற்போது 60% அளவுக்கு முன்னேறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுபோல ஏற்றுமதி பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று 81% ஏற்றுமதி யாளர்கள் தெரிவித்துள்ளனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

10 mins ago

இந்தியா

20 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

53 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்