கரோனா பரவலால் வெளிநாடுகளில் பணி புரிந்த15 லட்சம் பேர் கேரளா திரும்பினர்: 10.45 லட்சம் பேர் வேலையிழப்பு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 13 மாதங்களில் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த மாநிலமான கேரளாவுக்குத் திரும்பியோரின் எண்ணிக்கை சுமார் 15 லட்சமாகும். இவர்களில் 10.45 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தொடக்கத்தில் கரோனா வைரஸ் முதல் அலை பரவிய போது இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாடுகளில் வேலை செய்து வந்த இந்தியர்கள் பலரும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் வெளிநாடு வாழ் கேரள மாநிலத்தவர் துறை தகவலின் படி 14,63,176 பேர் தங்கள் மாநிலத்துக்கு திரும்பியுள்ளதாக தெரிகிறது. இவர்களில் 10,45,288 பேர் வேலையிழந்துவிட்டதாக தகவல் பதிவு செய்துள்ளனர்.

2.80 லட்சம் பேர் விசா காலம் முடிந்ததால் மீண்டும் வெளிநாடு செல்ல முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அத்துறை வெளியிட்ட தகவல் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்திலிருந்து 20 லட்சம் பேர் வெளிநாடுகளில் பணி புரிகின்றனர். இவர்கள் தங்கள் உறவினருக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் பணம்தான் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பின்புலமாக இருந்துவந்தது.

2020-ம் ஆண்டு மே மாதம் முதல் டிசம்பர் வரையான காலத்தில் 8.40 லட்சம் பேர் திரும்பியுள்ளனர். 2021 ஜூன் 18 வரையான காலத்தில் 14.63 லட்சம் பேர் கேரளா வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், ஓமன் ஆகிய நாடுகளில் இருந்து திரும்பியவர்களாவர். அதிகபட்சமாக 8.67 லட்சம் பேர் அமீரகத்தில்இருந்து திரும்பி உள்ளனர்என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிற நாடு களில் இருந்து கேரளாவுக்குத் திரும்பியோர் எண்ணிக்கை 55,960 ஆகும்.

வெளிநாட்டில் வேலையிழந்த வர்களுக்கு நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் அளிப்பதாக மாநிலஅரசு அறிவித்திருந்தது. இத்தொகை கோரி விண்ணப்பித்தோர் எண்ணிக்கை 1.7 லட்சமாகும்.இதுவரையில் 1.30 லட்சம் பேருக்குநிவாரண உதவி வழங்கப்பட் டுள்ளதாகவும், மேலும் சிலருக்கு இந்த உதவி பரிசீலனைக்குப் பிறகு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து கேரள மாநிலத்துக்கு வந்த தொகை ரூ.85 ஆயிரம் கோடியாகும். கடந்த ஆண்டில் இது ரூ.1 லட்சம் கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கரோனா வைரஸ் பரவல் காரணமாக பெரும்பாலோர் தாயகம் திரும்பும் நிலை உருவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

39 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்