பாராசிட்டமால் பவுடருக்கு பதில் சாக்பீஸ் தூள் அனுப்பி மோசடி: உத்தர பிரதேசத்தில் 9 பேர் கைது

By செய்திப்பிரிவு

யூனியன் பிரதேசமான டாமன் பகுதியில் உள்ள தபேல் கிரா மத்தில் ‘சாஃப்டெக் ஃபார்மா’ என்ற மருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம், டெல்லி முகவரி கொண்ட ‘யூரோ ஆசியா கெமிக்கல்ஸ்’ என்ற நிறுவனத்திடம் 5 டன் பாரா சிட்டமால் பவுடருக்கு ஆர்டர் கொடுத்து, முன்பணமாக ரூ.9.75 லட்சம் கொடுத்துள்ளது.

யூரோ ஆசியா கெமிக்கல்ஸ் கொடுத்த மாதிரியில் 98 சதவீதம் பாராசிட்டமால் இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகே இந்த ஆர்டர் தரப்பட்டது. ஆனால் அந்த நிறுவனம் அனுப்பிய சரக்கில் 98 சதவீதம் சாக்பீஸ் தூள் இருப்பது ஆய்வக பரிசோதனையில் தெரிவந்தது.

கான்பூரில் சோதனை

இது தொடர்பான புகாரின் பேரில் டாமன் போலீஸார் டெல்லி சென்றபோது, யூரோ ஆசியா கெமிக்கல்ஸ் ஒரு போலி நிறுவனம் எனத் தெரியவந்தது. பின்னர் அந்த நிறுவனத்தின் உண்மையான பெயர் யூரோ ஆசியா பயோ கெமிக்கல்ஸ் என்பதும் உ.பி.யின் கான்பூரில் அது செயல்பட்டு வருவதும் தெரியவந்தது. இதையடுத்து கான்பூரில் உள்ளூர் போலீஸார் உதவியுடன் சோதனை நடத் தப்பட்டது. இதில் நிறுவன உரிமையாளர் அஜய் குமார் உட்பட 9 பேரை போலீஸார் கைது செய்து அழைத்து வந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்