6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியாவால் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் சாத்தியமானது: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

By செய்திப்பிரிவு

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத் தப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2015 ஜூலை 1-ம் தேதி 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த திட்டம் 6 ஆண்டுகளை நிறைவு செய்ததை ஒட்டி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நேற்று ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

'ஆத்ம நிர் பாரத்' திட்டத்தின் ஆணி வேராக டிஜிட்டல் இந்தியா திட்டம் உள்ளது. இத்திட்டத்தால் அரசுக்கும் மக் களுக்கும் இடையிலான தூரம் குறைந் திருக்கிறது. அரசு நிர்வாகம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு டிஜிட்டல் முறையில் எளிதாக தீர்வு காண முடி கிறது. கரோனா காலத்தில் டிஜிலாக்கர் வசதியால் லட்சக்கணக்கான மக்கள் பயன் பெற்றுள்ளனர். பள்ளிச் சான்றிதழ்கள், மருத்துவ ஆவணங்கள், முக்கிய சான்றிதழ்களை பொதுமக்கள் டிஜிலாக்கரில் சேமித்து வைத்துள்ளனர்.

ஓட்டுநர் உரிமம், பிறப்புச் சான்றிதழ் பெறுவது, மின்சாரம், குடிநீர் கட்டணம் செலுத்துவது, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது உள்ளிட்ட பணிகளை டிஜிட்டல் முறையில் விரைவாகவும் எளிதாகவும் மேற்கொள்ள முடிகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தால்தான் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடிகிறது. அனைத்து மாநிலங்களும் ஒரே ரேஷன் திட்டத்தை விரைந்து அமல்படுத்த உச்ச நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் பல்வேறு அரசு நலத்திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பி.எம். சுயசார்பு நிதி திட் டத்தில் லட்சக்கணக்கான சாலையோர வியாபாரிகள் கடன் பெற்றுள்ளனர். ‘இ சஞ்சீவனி' தொலை மருத்துவ திட்டத்தின் மூலம் குக்கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இலவசமாக மருத்துவ ஆலோசனை வழங்கப்படு கிறது. நாடு முழுவதும் தேசிய டிஜிட் டல் சுகாதார திட்டத்தை செயல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா காலத்தில் ஒட்டுமொத்த உலக நாடுகளும் இந்தியாவின் டிஜிட் டல் திட்டங்களை வியந்து பாராட்டி பேசி வருகின்றன. ஆரோக்கிய சேது செயலி மூலம் கரோனா பரவல் தடுக்கப்படுகிறது. கோவின் டிஜிட்டல் தளம் மூலம் நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி சீராக நடை பெற்று வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் தொழில்நுட்பத்தை பயன்படுத்த பல் வேறு நாடுகள் விருப்பம் தெரி வித்துள்ளன.

அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிப்பது, அனைவருக்கும் அனைத்து வசதிகளையும் கிடைக்கச் செய்வது, அனைவரையும் பங்கெடுக்க செய்வது ஆகியவையே டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் தாரக மந்திரம். இந்த திட்டத்தின் மூலம் குறைந்த செலவில் நிறைவான சேவை வழங்கப்படுகிறது. அரசு நலத்திட்டங்களில் வெளிப் படைத்தன்மை அதிகரித்திருக்கிறது. பாரபட்சமான நடைமுறைகள் தடுக்கப் பட்டுள்ளன. ஊழல் ஒழிக்கப்பட்டு வருகிறது. நேரம், உழைப்பு, பணம் சேமிக்கப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் விரைவான, நிறைவான பலன் கிடைத்து வருகிறது.

கரோனா வைரஸ் பரவலை கட்டுப் படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த இக்கட்டான நேரத்தில் மக்களுக்கு நிவாரண நிதி வழங்க முடியாமல் பல நாடுகள் பரிதவித்தன. இந்தியாவில் ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக நிவாரண நிதி செலுத் தப்பட்டது. சுமார் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களுக்கு டிஜிட்டல் முறையில் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே விலை என்ற கனவும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் சாத்தியமாகி உள்ளது.

குக்கிராமங்களில் செயல்படும் 2.5 லட்சம் பொது சேவை மையங்களுக்கு இணைய வசதி செய்து கொடுக்கப் பட்டுள்ளது. பாரத் நெட் திட்டத்தின் மூலம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைய வசதி வழங்கும் திட்டம் போர்க் கால அடிப்படையில் செயல்படுத் தப்பட்டு வருகிறது. பி.எம். வாணி திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பொது வை-பை ஹாட்ஸ்பாட் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் நகரங்களுக்கு இணையாக கிராமங்களும் டிஜிட்டல்மயமாகி வருகின்றன. .

நாடு முழுவதும் மாணவர்களுக்கு குறைந்த விலையில் டேப்லெட், டிஜிட்டல் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் காரணமாக கடந்த 6 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களின் வாயிலாக ரூ.17 லட்சம் கோடி நிதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டிருக்கிறது.

உலகளாவிய அளவில் 5ஜி தொழில் நுட்பம் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. இதற்கு இந்தியா வும் தயாராகி வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞர் கள் புதிய உச்சத்தை தொடுவார்கள். இதன்மூலம் அடுத்த 10 ஆண்டுகள் டிஜிட்டல் துறையில் இந்தியா கோலோச்சும்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

கலந்துரையாடல்

இந்த நிகழ்ச்சியின்போது டிஜிட்டல் இந்தியா திட்டங்களால் பலன் அடைந்து வரும் பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந் துரையாடினார்.

தீக்சா செயலியை பயன்படுத்தி வரும் உத்தர பிரதேசம் பலராம்பூரைச் சேர்ந்த சுகானி சாகுவுடன் பிரதமர் கலந்துரையாடினார். கரோனா ஊர டங்கு காலத்தில் தீக்சா செயலி மூலம் வீட்டில் இருந்தே கல்வி கற்றதாக சுகானி கூறினார்.

இ-நாம் செயலி மூலம் பலன் அடைந்த மகாராஷ்டிராவின் ஹின்கோலி பகுதியைச் சேர்ந்த பிரகலாத் என்பவர் பிரதமரிடம் பேசும்போது, ஆன்லைன் வேளாண் சந்தையால் விளைபொருட்களை நல்ல விலைக்கு விற்க முடிகிறது என்று தெரிவித்தார்.

பிஹாரின் கிழக்கு சம்பிரான் பகுதியைச் சேர்ந்த சுபம் குமார் பேசும்போது, ‘‘எனது பாட்டி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவரை லக்னோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தோம். இ-சஞ்சீவனி திட்டத்தால் எனது பாட்டிக்கு மிகச் சிறப்பான மருத்துவ ஆலோசனை கிடைத்தது. லக்னோ பயணம் தவிர்க் கப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

உத்தராகண்ட் தலைநகர் டேராடூனைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஹரி ராம் பேசும்போது, "கரோனா காலத்தில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் எனது பசியைப் போக்கியது" என்று நன்றிபெருக்குடன் பிரதமரிடம் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

சினிமா

31 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்