கார்வார் கடற்படை தளத்தில் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆய்வு

By செய்திப்பிரிவு

கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடற்படை தளத்தை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி நிறைவடைந்ததும், ஆசியா வின் மிகப்பெரிய கடற்படை தளங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெறும்.

வரும் காலத்தில் கடற்படையின் (மேற்கு) நடவடிக்கைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தாக இந்த தளம் விளங்கும். இந்நிலையில், நேற்று கார்வார் சென்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், கடற்படை விரிவாக்கப் பணிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகள், வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

கர்நாடக பயணத்தை முடித்துக்கொண்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று இரவு கேரள மாநிலம் கொச்சி சென்றடைந்தார். அங்கு ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பல் கட்டும் பணியை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆய்வு செய்கிறார். நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான இது, இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கடற்படையில் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து முன்னதாக, அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லியிலிருந்து புறப்பட்டுள்ள நான் கார்வார் மற்றும் கொச்சியில் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறேன். கார்வார் கடற்படை தளத்தின் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மற்றும் கொச்சியில் நடைபெறும் விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்ய உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.-பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

விளையாட்டு

46 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்