டெஹ்ராடூன் என்கவுண்டர்: 17 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

By செய்திப்பிரிவு

2009ஆம் ஆண்டு ரன்பீர் சிங் என்ற எம்.பி.ஏ. மாணவரை என்கவுண்டர் செய்த வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 17 போலீசாருக்கும் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

காஸியாபாதிலிருந்து வேலை தேடி டெஹ்ராடூன் வந்த ரன்பீர் சிங் என்பவரை 2009ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி குற்றச்செயலில் ஈடுபட்டதாக துப்பாக்கியால் சுட்டு என்கவுண்டர் செய்தனர் போலீசார்.

இந்த வழக்கில் 18 போலீஸார் மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் கொலைக் குற்றவாளிகள் என்று சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இன்னொருவருக்கு சாட்சியங்களை அழித்ததற்கான தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற போலீஸார் விவரம் வருமாறு:

இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஜைஸ்வால், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபால் தத் பட், ராஜேஷ் பிஸ்த், நீரஜ் குமார், நிதின் சவான், மற்றும் சந்திர மோகன்.

கான்ஸ்டபிள்கள் அஜீத் சிங், சத்பீர் சிங், சுனில் சைனி, சந்தர்பால், சௌரவ் நவ்டியால், நாகேந்திர நாத், விகாஸ் சந்திர பலூனி, சஞ்சய் ராவத், மோகன் சிங் ரானா, இந்தர் பான் சிங், மற்றும் மனோஜ் குமார்.

இவர்களுக்கு எதிராக சாட்சியங்கள் பலமாக இருந்ததால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்