கரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க சுகாதார அடிப்படை வசதிகள் 45 மடங்கு அதிகரிப்பு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்க சுகாதார அடிப்படை வசதிகள் 45 மடங்கு அதிகரிக் கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸ் தொற்றைச் சமாளிக்க தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஜூன் 19-ம் தேதி வரை 27.23 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்த கட்டணம், அட்வான்ஸ், செயல்பாட்டு மதிப்பு ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.9,504.315 கோடி ஆகும்.

விரைவில் கரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை பரவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சவாலை எதிர்கொள்ள மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டில் 2,500 ஆகஇருந்த தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியு) படுக்கை வசதி தற்போது 1,13,035 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் அடிப்படை சுகாதார வசதி 45 மடங்கு அதிகரித்துள்ளது.

ஒட்டுமொத்த தனிமைப்படுத் தப்பட்ட படுக்கைகள் (ஐசியு படுக்கை வசதி தவிர) 42 மடங்குஅதாவது, 41 ஆயிரத்திலிருந்து 17.17 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் கோவிட்-19 முதல்வகுப்பு மருத்துவமனைகள் 25 மடங்கு அதாவது 163-லிருந்து 4,096 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 2-ம் வகுப்பு மற்றும்3-ம் வகுப்பு மருத்துவமனைகள் 25 மடங்கு அதாவது 7,929-லிருந்து 9,954 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆக்சிஜன் வசதியுள்ள படுக்கைகள் 7.5 மடங்கு அதாவது 50,583-லிருந்து 3.81 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்