மிசோரமில் 39 மனைவிகள், 94 பிள்ளைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் மரணம்

By செய்திப்பிரிவு

மிசோரமில் 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரக் குழந் தைகளுடன் வாழ்ந்த உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலை வர் ஜியோனா சானா (76) மரணம் அடைந்தார்.

மிசோரம் தலைநகர் அய்ஸ் வாலில் இருந்து 55 கி.மீ. தொலைவில் உள்ள பக்டாங் கிராமத்தில் ஜியோனா சானா வசித்தார். இவர் தனது 17-வதுவயதில் முதல் திருமணம் செய்தார். அடுத்தடுத்து பல பெண்களை அவர் திருமணம் செய்துகொண்டார். தனது 60-வதுவயதில் அவர் கடைசியாக 39-வது மனைவியை திருமணம் செய்தார்.

ஜியோனாவுக்கு 94 பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் பலருக்கு திருமணமாகி 33 பேரக் குழந்தைகள் உள்ளனர். ஒரு கொள்ளு பேரனும் உள்ளார். இவர்கள் 4 அடுக்கு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட வீட்டில் ஒன்றாக வசிக்கின்றனர்.

ஜியோனாவின் குடும்பத்தை பார்ப்பதற்காக உள்ளூர் முதல் உலக நாடுகள் வரை ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் பக்டாங் கிராமம் மிசோரமின் முக்கிய சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது.

இந்த பின்னணியில் கடந்த சில ஆண்டுகளாக வயது முதுமை காரணமாக நீரழிவு நோய், ரத்த அழுத்த பிரச்சினைகளால் ஜியோனா பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த வாரம் அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. 3 நாட்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலை மோசமானதால் தலைநகர் அய்ஸ் வாலில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா மற்றும்அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித் துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்