பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் நினைவு வருவதில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

By செய்திப்பிரிவு

கரோனா இரண்டாவது அலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, “யார் பொறுப்பு?” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.

இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பிரியங்கா காந்தி நேற்று வெளியிட்ட பதிவு வருமாறு:

பிரதமர் நரேந்திர மோடி தனது கடமையிலிருந்து பின்வாங்கி விட்டார். மோசமான காலம் கடக்கும் வரை அவர் காத்திருந்தார். ஒரு கோழையைப் போல் அவர் நடந்து கொண்டார். நமது நாட்டை அவர் வீழ்ச்சியடையச் செய்துவிட்டார். தற்பெருமையில் அவருக்குள்ள பரந்த ஆற்றல் வெளிப்பட்டுள்ளது. பிரதமருக்கு இந்தியர்கள் பற்றிய நினைவு முதலில் வருவதில்லை. அரசியல் பற்றிய நினைவுதான் முதலில் வருகிறது.

பிரதமரிடம் இந்த பாதிப்புக் கெல்லாம் யார் பொறுப்பு என்று மக்கள் கேட்க வேண்டிய நேரம் வந்துள்ளது. தொற்று நோய்தொடக்கத்தில் இருந்தே உண்மையை மறைக்கவும் பொறுப்புகளை சுருக்கிக் கொள்ளவுமே மோடி அரசு முயற்சி செய்தது.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

வணிகம்

41 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்