சரக்கு, சேவை வரி மசோதாவுக்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வி

By பிடிஐ

சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை நிறைவேற்று வதற்காக மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி தலைமையில் நேற்று நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

கூட்டத்துக்கு பின் நிருபர்களிடம் நாடாளுமன்ற விவகாரத் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கூறியதாவது:

இந்த கூட்டத்தில் ஆக்கப்பூர்வ மான விவாதம் நடந்தது. நாடாளுமன்றம் முடக்கப்பட்டதற்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் கவலை தெரிவித்தன. நாடாளுமன்றம் இயங்க வேண்டும் என அனைவரும் முடிவு எடுத்துள்ளோம். கூடுதல் நேரத்தை ஒதுக்கியாவது நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்துள் ளோம். சரக்கு மற்றும் சேவை வரி மசோதா நிறைவேற பிரதான எதிர்க்கட்சி இசைவு தெரிவிக்குமா என தெரியவில்லை. மேலும் இதில் அவர்களது நிலைப்பாடு என்னவென்பதையும் அவர்கள் தெளிவாக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆஸாத் கூறும்போது, ‘‘அலுவல் ஆலோசனை குழு கூட்டத்தில் நடந்த விவாதங்கள் தான் தற் போதும் நடந்துள்ளது. புதிதாக எதுவும் இல்லை. சரக்கு மற்றும் சேவை வரி மசோதா குறித்து முடிவு எட்டப்படவில்லை’’ என்றார்.

விலைவாசி உயர்வு, வெள்ளம் மற்றும் பஞ்சத்தால் நசிந்து வரும் வேளாண் உற்பத்தி, சகிப்பின்மை, அருணாச்சலப் பிரதேச மாநில அரசியல் உட்பட பல்வேறு பொது நலன் சார்ந்த விவகாரங்களும் கடைசி நாட்களில் நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்