நடுக்கடலில் கேப்டனுக்கு உடல்நிலை பாதிப்பு; துரிதமாக மீட்ட கடலோர காவல்படை

By செய்திப்பிரிவு

கோவா அருகே மருத்துவ உதவி தேவைப்பட்ட வணிக கப்பல் கேப்டனை, இந்திய கடலோர காவல்படை ஹெலிகாப்டர் துரிதமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்தது.

மும்பை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து, இந்திய கடலோர காவல் படைக்கு நேற்று ஒரு அவசர அழைப்பு வந்தது. கோவாவுக்கு தென்மேற்கே 109 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள எம்.டி எலிம் என்ற சரக்கு கப்பலில், 50 வயதான தென்கொரிய கேப்டனுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து கோவாவிலிருந்து இந்திய கடலோர காவல் படை கப்பல் சி-158, மீட்பு பணிக்கு நேற்று புறப்பட்டது. மீட்பு பணியை துரிதமாக மேற்கொள்ள கடலோர காவல் படையின் சேத்தக் ரக ஹெலிகாப்டரும் அனுப்பப்பட்டது.

மோசமான வானிலையிலும், அந்த ஹெலிகாப்டர் மார்ஷல் தீவைச் சேர்ந்த எம்.டி.சலீம் என்ற அந்த கப்பலை நெருங்கியது. ஹெலிகாப்டரில் சென்ற டைவர் கப்பலில் இறங்கி நோயாளியை பத்திரமாக ஹெலிகாப்டரில் ஏற்றினார்.

கோவாவின் வாஸ்கோ நகரில் எஸ்எம்ஆர்சி மருத்துவமனையில், சரக்கு கப்பல் கேப்டன் சேர்க்கப்பட்டார். அவரது உடல் நிலை தற்போது நன்றாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

38 mins ago

வணிகம்

53 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

மேலும்