கரோனா 2-வது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம்முதலாக கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதனை வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு பரவிய முதல் அலையை ஒப்பிடுகையில், இரண்டாம் அலை வீரியமிக்கதாக உள்ளது.

இதில் அதிகபட்சமாக, கடந்தமாத தொடக்கத்தில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். உயிரிழப்பும் அதிக அளவில்இருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துவருகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலைக்கு நாடு முழுவதும் இதுவரை 646 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு சுமார் 8 மாதங்கள் நீடித்த கரோனா முதல் அலையில் 748 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.

ஆனால், இரண்டாம் அலை தொடங்கி 4 மாதங்களிலேயே 600-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக மருத்துவ சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

இரண்டாம் அலைக்கு டெல்லி யில்தான் அதிக மருத்துவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அங்கு இதுவரை 109 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். அதற்கு அடுத்தடுத்த இடங்களில் பிஹார் (97), உத்தரபிரதேசம் (79), ராஜஸ்தான் (43), ஜார்க்கண்ட் (39), குஜராத் (37), ஆந்திரா (35), தெலங்கானா (34), மேற்கு வங்கம் (30) ஆகிய மாநிலங்கள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

31 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்