1,300 கரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்த சமூக ஆர்வலர் அலைக்கழிப்பு: மருத்துவமனையில் இடம், மருந்து கிடைக்காமல் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர் சந்தன் நிம்ஜி (67). ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலரான அவர், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சுமார் 1,300-க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளின் உடல்களை தகனம் செய்துள்ளார். கடந்த மே மாத தொடக்கத்தில் சந்தன் நிம்ஜிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காததால், நாக்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

சந்தன் நிம்ஜிக்கு 2 மகன்கள் உள்ளனர். கரோனா காலத்தில் இருவரும் வேலையிழந்துள்ளனர். இதன் காரணமாக மருத்துவமனை கட்டணத்தை செலுத்த முடியாமல் மகன்கள் பரிதவித்தனர். மேலும் நிம்ஜிக்கு தேவையான மருந்துகளும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக மே 26-ம் தேதி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து நிம்ஜியின் நண்பர் அரவிந்த் கூறும்போது, ‘‘குறிப்பிட்ட மருந்துக்காக மாவட்ட ஆட்சியர், அரசியல் தலைவர்கள் பலரிடம் உதவி கோரினோம். யாரும் உதவ முன்வரவில்லை. இதுதொடர்பாக மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்