எம்.பி.க்களுக்கு பாஜக கட்டுப்பாடு: ஆத்திரமூட்டும் பேச்சுகளை தவிர்க்க வேண்டும்- கட்சி கூட்டத்தில் அறிவுறுத்தல்

By பிடிஐ

ஆத்திரமூட்டும் பேச்சுகளை தவிர்க்கும்படி கட்சி எம்பிக்களுக்கு பாஜக தலைவரும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கட்சியின் தலைவர்களும் சில அமைச்சர்களும் ஏதாவது சர்ச்சைக் கருத்துகளை பேசுவதால் அதை கையில் எடுத்து அரசு மீது எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டி பேசுகின் றன. மேலும் சகிப்பின்மை இல்லை என்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சிகள் பிரச்சினை எழுப்பி வருகின்றன. இதற்கு விளக்கம் அளித்துப் பேசுவது பெரிய சுமை யாகிறது என்றார் நாயுடு.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரையொட்டி கட்சி எம்பிக்கள் கூட்டத்தை அமைச்சர் வெங்கய்யநாயுடு கூட்டி ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் வளர்ச்சிக்காக எடுத்து வரும் நல்ல திட்டங்களின் முக்கியத்துவத்தை குலைக்கும் வகையில் பாஜகவினர் பேசும் சர்ச்சைப் பேச்சுகளை பெரி தாக்கி பாஜக எதிர்ப்பு சக்திகள் ஊதிவிடுகின்றன. இதை கவனத் தில் கொள்ள வேண்டும் என்று எம்பிக்களுக்கு அவர் வேண்டு கோள் விடுத்தார்.

இந்த கூட்டம் முடிந்தபிறகு நாடாளுமன்ற விவகார இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நிருபர்களிடம் கூறியதாவது:

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வி உட்பட பல் வேறு விவகாரங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. கட்சி கொள்கைகளை மக்கள் மத்தியில் விரிவாக பரப்ப நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தப்பட்டது.

நாட்டின் முன்னேற்றம் நல்ல வழியில் செல்வதாக குறிப்பிட்ட நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, அதற்கு அடையாளமாக கடந்த காலாண்டில் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதத்தை தொட்டதை சுட்டிக் காட்டினார். கண்ணியத்தை கடைபிடித்து பாஜக பேசுவது அவசியம் என்று அறிவுரை வழங்கப்பட்டது. சர்ச்சைக்கு இடம் தரக்கூடாது என்று அறிவுரை வழங் கப்பட்டது. நாட்டுமக்களை குழப்பு வோரின் முகத்திரையை கிழிப்பதற் காகவே சகிப்பின்மை பற்றிய விவா தம் நடத்தப்படுகிறது.

பாஜக தலைமையிலான கூட்டணி அரசுதான் வகுப்புக் கலவரங்களை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.எங்கும் இப்போது சமூக நல்லிணக்கம் நிலவுவது பற்றி கட்சி எம்பிக்களிடம் தெரிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் மோடி நடத்திய பேச்சு பற்றி யும் கூட்டத்தில் எடுத்துரைக்கப் பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்