ஆந்திர பேரவை சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் நோட்டீஸ்

By என்.மகேஷ் குமார்

ஆந்திர சபாநாயகர் கோடல சிவபிரசாத்துக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றக் கோரி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் நேற்று நோட்டீஸ் அளித்தனர்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தரக்குறைவாக பேசியதாக சித்தூர் மாவட்டம், நகரி சட்ட மன்ற தொகுதியின் உறுப்பினரும், நடிகையுமான ரோஜாவை ஓராண்டு சட்டப்பேரவையில் இருந்து இடைக்கால நீக்கம் செய்து சபாநாயகர் கோடல சிவபிரசாத் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, இந்த தடையை நீக்க வேண்டுமென ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகரிடம் முறையிட்டனர். மேலும், சபாநாயகருக்கு சட்டமன்ற உறுப்பினரை ஓராண்டு வரை இடைக்கால நீக்கம் செய்வதற்கு சட்டப்படி உரிமை இல்லை எனவும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்து

இதற்கிடையில் நேற்று காலை ஹைதராபாதில் சட்டப்பேரவை செயலாளர் சத்ய நாராயணாவை சந்தித்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், சபாநாயகர் கோடல சிவப்பிரசாத் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை வழங்கினர். இதில் இக்கட்சியை சேர்ந்த 67 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத் திட்டுள்ளதாக தெரியவந்துள் ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

உலகம்

1 min ago

இந்தியா

12 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்