ஆயுர்வேத கரோனா மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி

By என்.மகேஷ்குமார்

ஆந்திராவின் நெல்லூர் கிருஷ்ணப் பட்டினம் அருகே முத்துக்கூறு பகுதியை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தைய்யா, பொதுமக்களுக்கு 3 வகையான கரோனா தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கி வந்தார். கண்களில் விடும் சொட்டு மருந்தையும் வழங்கி வந்தார்.

நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருந்துக் காக கிருஷ்ணப்பட்டினத்தில் குவிந்தனர். இதுகுறித்து அறிந்த முதல்வர் ஜெகன் மோகன், கரோனா பரவும் அபாயம் இருப்பதை உணர்ந்து, மருந்து விநியோகத்தை நிறுத்த உத்தரவிட்டார்.

மேலும், மருந்தின் உண்மை குறித்து அறிய ஆயுர்வேத மருத்துவ குழுவையும் நியமனம் செய்தார். அக்குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனிடையே திருப்பதி ஆயுர் வேத பல்கலைக்கழகத்தில் எலிகள், முயல்களுக்கு ஆனந்தை ய்யாவின் மருந்தை வழங்கி மருத்துவ பரிசோதனைகளும் தொடங்கின.

இதற்கிடையில் எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாத கரோனா மருந்தை விநியோகம் செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் ஆனந்தைய்யா தரப்பில் கோரப்பட்டது.

அதன்பின், "ஆனந்தையாவின் மருந்தில் எந்த பக்க விளைவுகளும் இல்லை, கண்ணுக்கு விடும் மருந்து குறித்து அறிய 15 நாட்கள் கால அவகாசம் தேவை" என்று உயர் நீதிமன்றத்தில் தேசிய ஆயுர்வேத பரிசோதனை அமைப்பு (சிசிஆர்ஏஎஸ்) அறிக்கை சமர்ப்பித்தது.

அனைத்து தரப்பு வாதங்களை யும் கேட்ட உயர் நீதிமன்றம் ஆனந்தைய்யாவின் மருந்தை மக்களுக்கு விநியோகம் செய்யலாம் என்று நேற்று தீர்ப்பளித்தது. இந்நிலையில், ஆந்திர அரசும் நேற்று அனுமதி வழங்கியது.

ஆனால், "சமூக இடை வெளியை பின்பற்ற வேண்டும், கரோனா நோயாளிகளின் உறவினர்கள் மருந்தை பெற்று கொள்ளலாம்" என்று ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மருந்துகளை வாங்க மக்கள் நெல்லூர் நோக்கி படை எடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

15 mins ago

தமிழகம்

5 mins ago

சினிமா

13 mins ago

தமிழகம்

35 mins ago

க்ரைம்

51 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

36 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்