கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14 மாநிலங்களில் 90 சதவீதமாக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

டெல்லி, உத்தரபிரதேசம், பிஹார் உள்ளிட்ட 14 மாநிலங்களில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 90 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கரோனா வைரஸ் 2-வது அலை நாடுமுழுவதும் வேகமாக பரவி யது. தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரு கின்றன. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது. தடுப்பூசி போடும் நட வடிக்கைகளும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

இதனால், கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறைந்து வரு கிறது. 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 90 சதவீதத் துக்கு அதிகமாக உயர்ந்துள்ளது.

டெல்லியில் அதிகபட்சமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 97 சதவீதமாக உள்ளது. உத்தர பிரதேசம், பிஹார், ஹரியாணா மாநிலங்களில் 94 சதவீதம் பேரும், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 93 சதவீதம் பேரும் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குறைந்தபட்சமாக உத்தராகண்ட் மாநிலத்தில் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 80.7 சதவீதமாக உள்ளது.

மிசோரம், மேகாலயா, நாகா லாந்து, சிக்கிம் ஆகிய மாநிலங்களில் குணமடைந்தோர் எண்ணிக்கை 70 முதல் 76 சதவீதமாகவும் கர்நாடகா, காஷ்மீர், தமிழ்நாடு, புதுச்சேரி, மணிப்பூர், ஒடிசா, அசாமில் 80 முதல் 84 சதவீதமாகவும் உள்ளது. இது தேசிய சராசரி அளவான 89 சதவீதத்துக்கு குறைவாக இருந்தாலும் இந்த மாநிலங்களில் குணமடைவோர் எண்ணிக்கையில் முன்னேற்றம் உள்ளது.

பல மாநிலங்களிலும் தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், கடந்த மாதம் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் 37 லட்சமாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் 26 லட்சத்துக்கும் கீழாக குறைந்துள்ளது.

தொடர்ந்து இறங்குமுகம்

கரோனாவால் தினசரி பாதிக் கப்படுவோரின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து இறங்குமுகமாகவே உள்ளது. அதன்படி, நேற்றும் பாதிக்கப்பட் டோர் எண்ணிக்கை குறைந்தது. நேற்று காலை 7 மணி வரை யிலான 24 மணி நேரத்தில் கரோனா தொற்றால் புதிதாக 2 லட்சத்து 8 ஆயிரத்து 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை யடுத்து, இதுவரை மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடியே 71 லட் சத்து 57 ஆயிரத்து 795 ஆக உள் ளது. கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 955 பேர் கரோனாவில் இருந்து குண மடைந்துள்ளனர். ஒரு நாளில் புதிதாக தொற்றால் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கையைவிட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நாடு முழுவதும் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட சளி மாதிரிகள் பரிசோதனை செய் யப்பட்டுள்ளன. ஒரே நாளில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் இதுவே அதிகபட்ச எண்ணிக்கை யாகும். இந்தத் தகவல்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

20 கோடி தடுப்பூசி

இதனிடையே, நாடு முழுவதும் கரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மக்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டு நேற்றுடன் 130 நாட்கள் நிறைவடைந்தது. இதில் புதிய மைல்கல்லாக நேற்றுடன் நாடு முழுவதும் 20 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் மக்களுக்கு 20 கோடியே 6 லட்சத்து 62 ஆயிரத்து 456 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இதில் 15 கோடியே 71 லட்சத்து 49 ஆயிரத்து 593 முதல் டோஸ்களும், 4 கோடியே 35 லட்சத்து 12 ஆயிரத்து 863 இரண்டாவது டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

மேலும்