அலிகரின் பொது சுகாதார நிலையம் முன்பு கரோனா தொற்று தடுப்பு மருந்துகள் நிரம்பிய 29 ஊசிகள் கண்டெடுப்பு: விசாரணை நடத்த உத்தரபிரதேச அரசு உத்தரவு

By ஆர்.ஷபிமுன்னா

உத்தரபிரதேசம் அலிகரின் பொது சுகாதார நிலையத்தின் முன் கரோனா தடுப்பு மருந்துகள் நிரம்பிய 29 ஊசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனால், அம்மாநில அரசின் மருத்துவ அதிகாரிகள் அதிர்ச்சிக்குள்ளாகி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தை ஒட்டி முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதி ஜமால்பூர். இங்குள்ள அரசு பொது சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்காக கரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதன் பின்புறப்பகுதியில் கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் நிரம்பிய 29 சிரிஞ்ச்களுடன் ஊசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று காலை நடைபெற்ற இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநில மருத்துவ அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ஏனெனில், நாடு முழுவதிலும் தடுப்பூசிகள் பற்றாக்குறை மீதானப் புகார்கள் நிலவுகின்றன. அதிலும், கோவிஷீல்டு மற்றும் கோவாக்ஸின் ஆகியவற்றில் இரண்டாவது வகை தடுப்பு மருந்திற்கு அதிக விருப்பம் நிலவுகிறது. இச்சூழலில், தடுப்பு மருந்துகள் நிரம்பிய 29 சிரிஞ்ச்களுடனான ஊசிகள் குப்பையில் கிடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உத்தரபிரதேச மாநில மருத்துவ அதிகாரிகள் வட்டாரம் கூறும்போது, ’அந்த சுகாதார நிலையத்தில் அளிக்கப்பட்ட கோவாக்ஸின் தடுப்பு மருந்துகள் வீணாகாமல் அனைத்தும் செலுத்தப்பட்டு விட்டதாக கோவிட் 19 இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆதார் எண்களும் பதிவாகி உள்ள நிலையில்மருந்துகள் மட்டும் வீணாக்கப்பட்டிருப்பது மர்மமாக உள்ளது’ எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், சம்பவத்தை விசாரிக்க அலிகர் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் பானு பிரதாப் கல்யாணி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட தடுப்பு மருந்து அதிகாரி தலைமையில் மூன்று பேர் கொண்டவிசாரணைக்குழு அமர்த்தப்பட்டுள்ளது. இக்குழு தனது அறிக்கையை மூன்று தினங்களில்அளிக்கவும் உத்தரவிடப்பட் டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்