ஜூலை மாதத்துக்குள் 51.6 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கும்: சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் உறுதி

By செய்திப்பிரிவு

வரும் ஜூலை மாதத்திற்குள் 51.6 கோடி பேருக்கு கரோனா வைரஸ் தடுப்பூசிகள் செலுத்தப் பட்டிருக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உறுதியளித்தார்.

கரோனா பரவல் விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஹர்ஷ்வர்தன் காணொலிக் காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது, வைரஸ் தொற்று வேகமாக பரவுவதற்கான காரணங் கள், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிகழ்வில் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது:

நாட்டில் கரோனா தடுப்பு மருந்துகளின் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 18 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

ஜூலை இறுதிக்குள் 51.6 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருக்கும். ரஷ்யா வின் 'ஸ்புட்னிக் வி' கரோனா தடுப்பூசிக்கும் தற்போது அனுமதி கிடைத்திருக்கிறது. எனவே, தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்படும் சூழல் எழுவதற்கு இனி வாய்ப்பில்லை.

குஜராத்தை பொறுத்தவரை அங்கு கரோனா பரவல் தீவிரமாக உள்ளது. குணமடைவோரின் விகிதமும் 79 சதவீதமாகவே உள்ளது. தேசிய அளவில் குணமடைவோரின் விகிதத்தை ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு ஆகும்.

குஜராத்தின் அகமதாபாத், வதோதரா உள்ளிட்ட நகரங்களில் ஐசியு படுக்கைகளுக்கும், ஆக்சி ஜன் சிலிண்டர்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதேபோல, ஆந்திரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேச மாநிலங்களிலும் கரோனா பரவல் அதிகரித்து வருவதுடன், உயிர்காக்கும் மருத்துவ உபகர ணங்களுக்கும் தட்டுப்பாடு நிலவு கிறது. இதற்கு தீர்வு காண மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஹர்ஷ்வர்தன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

20 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்