125 கோடி இந்தியரும் தேச பக்தர்கள்: நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு

By பிடிஐ

நாட்டில் 125 கோடி இந்தியர்களும் தேசப்பற்று மிக்கவர்கள், அதற்கு யாரும் சான்றிதழ் அளிக்க தேவையில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி மாநிலங்களவையில் நேற்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டம் குறித்து இரு அவைகளிலும் விவாதிக்கப்பட்டது. இதில் மக்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு கடந்த 27-ம் தேதி பதிலளித்துப் பேசிய பிரதமர் மோடி, இந்தியா என்பதே எனது அரசின் மதம், அரசமைப்புச் சட்டம் புனித நூல் என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்துக்கு நேற்று அவர் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டின் பிரிவினைக்கு ஒருபோதும் இடம் தரக்கூடாது. இந்தியராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். 125 கோடி இந்தியர்களின் தேசப்பற்றுக்கு யாரும் சான்றிதழ் தர தேவையில்லை. நாட்டில் ஒற்றுமையும் சமூக நல்லிணக்கமும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இந்தியா வேகமாக முன்னேறும். நாட்டின் ஏதாவது ஒரு மூலையில் யாராவது ஒருவருக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டால் அது நம் நாட்டுக்கு ஒரு கருப்புப் புள்ளி. அதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

37 secs ago

க்ரைம்

39 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

மேலும்