கரோனா பரவல் அதிகரிப்பால் மே 31-ம் தேதி வரை - சர்வதேச விமானங்களுக்கு இந்தியாவில் தடை: மத்திய அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலையின் வீச்சு மிக தீவிரமாகஉள்ளது. இதைக் கருத்தில் கொண்டு சர்வதேச விமான போக்குவரத்துக்கு மே 31 வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இருப்பினும் சர்வதேச விமானபோக்குவரத்து அவற்றின் தன்மைக்கேற்ப அனுமதிக்கப்படும். இதை சிவில் விமான போக்குவரத்து அமைச்சக இயக்குநரகம் முடிவு செய்யும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சரக்கு விமான போக்குவரத்துக்கு இந்த விதிமுறை பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதியிலிருந்து வழக்கமான விமான போக்குவரத்து சேவைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வந்தே பாரத் மிஷன் எனும் சிறப்பு சேவை அடிப்படையில் விமான போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு மே முதல் செயல்படுத்தப்படுகிறது. இந்த விமான போக்குவரத்து சேவையானது தேவையின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் டெல்லியிலிருந்து நேரடி விமான போக்குவரத்து சேவையைதடை செய்வதாக கடந்த வாரம் ஆஸ்திரேலியா அறிவித்தது. இதே போன்ற முடிவை கனடா,ஐக்கிய அரபு அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளும் எடுத்துள்ளன.

நேற்று மட்டும் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவாக 3.85 லட்சம் பேர் கரோனாவைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கரோனா வைரஸ்தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 1.87 கோடியாக அதிகரிதுள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் தேவையான மருத்துவ உதவிகளை இந்தியாவுக்கு வழங்கி வருகின்றன.

கரோனா பரவலின் தீவிரத்தைக் குறைக்க சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்