நர்மதை-மால்வா நதிகள் இணைப்பு திட்டத்துக்கு ம.பி. அரசு ஒப்புதல்

By செய்திப்பிரிவு

ஷிப்ரா மற்றும் நர்மதை ஆறுகள் இணைப்பு திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டதையடுத்து, நர்மதை-மால்வா-காம்பிர் ஆறுகள் இணைப்பு திட்டத்துக்கு மத்தியப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நர்மதை கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்கு ரூ.2,143 கோடியை வாரியம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் இந்தூர் மற்றும் உஜ்ஜயினி மாவட்டங்களைச் சேர்ந்த 158 கிராமங்களில் உள்ள 50 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்புக்கு பாசன வசதி கிடைக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகள், பாசனம், குடிநீர் ஆகியவற்றுக்கான தண்ணீர் தேவையை சமாளிக்க மால்வா பகுதியில் உள்ள ஆறுகளை நர்மதையுடன் இணைப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும் என முதல்வர் சவுகான் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என பிரமரிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

24 mins ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்