மே.வங்கத்தில் 45 தொகுதியில் இன்று 5-ம் கட்ட வாக்குப் பதிவு

By செய்திப்பிரிவு

மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு மார்ச் 27-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 29-ம் தேதி வரை 8 கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில்4 கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ளது. மாநிலத்தில் 294 தொகுதிகளில் இதுவரை 135 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது.

5-ம் கட்ட தேர்தல் இன்று (ஏப் 17) நடைபெற உள்ளது. ஜல்பைகுரி, கலிம்பாங், டார்ஜிலிங்புர்பா பர்தமான் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 45 தொகுதிகள் இன்று தேர்தலை சந்திக்கின்றன. 39 பெண்கள் உட்பட 319 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் இந்த 45 தொகுதிகளில் 32-ல் திரிணமூல் காங்கிரஸும் 10-ல் காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளும் வென்றன. பாஜக ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

ஆனால் கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த 45 தொகுதிகளில் 23-ல் திரிணமூல் கட்சியும் 22-ல் பாஜகவும் அதிக வாக்குகளைப் பெற்றன. ஆனால் சதவீத அடிப்படையில் பாஜக (45%) முதலிடத்தையும் திரிணமூல் கட்சி (41.5%) இரண்டாம் இடத்தையும் பெற்றன.

இம்முறை அதிக எண்ணிக்கை யிலான தொகுதிகள் தேர்தலை எதிர்கொள்வதால் மேற்கு வங்க தேர்தலுக்கு இது முக்கிய கட்டமாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

12 mins ago

கருத்துப் பேழை

8 mins ago

சுற்றுலா

45 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்