இந்திராணி, பீட்டர் முகர்ஜியிடம் ரூ. 275 கோடி கருப்புப் பணம்

By செய்திப்பிரிவு

ஷீனா போரா கொலைவழக்கில் தொடர் புடைய அவருடைய தாய் இந்திராணி முகர்ஜி, இந்திராணியின் 3-வது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோர் தங்களது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு போலியான நிறுவனங்கள் மூலம் வெளிநாடுகள் வழியாக ரூ.275.5 கோடி கருப்புப் பணத்தை பெற்றுள்ளதாக, மத்திய நேரடி வரி ஆணைய அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய நேரடி வரி ஆணையம் அனுப்பிய அறிக்கை தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு கிடைத்துள்ளது. மத்திய நேரடி வரி ஆணையத்தின் துணைச் செயலாளரால், வருமான வரித்துறை தலைவருக்கு இந்த அறிக்கை 2014 மே 5-ம் தேதி அனுப்பப்பட்டுள்ளது.

அதில் தெரிவித்துள்ள விவரங்களின்படி, “முகர்ஜி தம்பதி தங்களின் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு கருப்புப் பணத்தை போர்ட் லூயிஸ் மற்றும் மொரீஷியஸ் நாடுகள் வழியாக பெற்றுள்ளனர். சந்தேகத்துக்குரிய 8 துணை நிறுவனங்கள் மூலம் 2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளில் கணிசமான தொகை முதலீடாக பெறப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் 2008-09-ம் ஆண்டு ரூ.270 கோடி இழப்பு என அறிவித்தது. ஆனால் அதே ஆண்டு, அக்குழுமத்துக்கு ரூ.275.5 கோடி, தெரிவிக்கப்படாத ஆதாரங் கள் மூலம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருமானமாக பெறப்பட்டிருப்பதை வருமான வரித்துறை கண்டறிந்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வருமான வரித்துறை அனுப்பியுள்ள வரி விதிப்பு ஆணையில், பணப்பரிவர்த்தனை களுக்கான ஆதாரம், தகுதியை நிரூபிக்கு மாறு கோரப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

சினிமா

47 mins ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்