பொதுமக்கள் வசதிக்காக 1.25 லட்சம் தபால் நிலையங்களில் ஏடிஎம் மையம் அமைக்கும் பணி தீவிரம்

By பிடிஐ

நாடு முழுவதும் 1.25 லட்சம் தபால் நிலையங்களில் ஏடிஎம் மையங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவை நேற்று கூடியதும் சிறு நகரங்களில் இருந்து சற்று தொலைவில் வசிக்கும் கிராம மக்கள் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வதற்கு மிகுந்த சிரமப்பட வேண்டியுள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து பேசிய மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, ‘‘நாடு முழுவதும் உள்ள 1.25 லட்சம் தபால் நிலையங்களில் ஏடிஎம் மற்றும் குறு ஏடிஎம் மையங்கள் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறு நகரங்களில் இருந்து சற்று தொலைவில் ஊருக்குள் வசிக்கும் கிராம மக்களும் பயன்பெறுவர். மேலும் எளிதான பண பரிவர்த்தனைக்காக மித்ரா வங்கி சார்பில் அந்தந்த கிளைகளில் தற்காலிக பணியாளர்கள் போதிய அளவுக்கு பணியமர்த்தப்படுவர். பொதுத் துறை வங்கிகளில் பணியாற்றிய 38 ஆயிரம் பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர். காலியான அந்த பணியிடங்களுக்கும் சேர்த்து, மொத்தம் 60 ஆயிரம் ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பொதுத் துறை வங்கிகளில் போதிய அளவுக்கு பணியாட்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

59 mins ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்