இது எங்களுக்கு தீபாவளி போன்றது: மாவோயிஸ்ட்களால் விடுவிக்கப்பட்ட சிஆர்பிஎப் வீரரின் தாய் மகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 3-ம் தேதி நடந்த என்கவுன்ட்டரின்போது, சிஆர்பிஎப் கோப்ரா படையின் ராகேஷ்வர் சிங் மன்ஹாஸ் (35)மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டார். அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக ராகேஷ்வர் சிங் நேற்றுமுன்தினம் விடுவிக்கப்பட்டார்.

ஜம்முவின் லோயர் பர்னாய் பகுதியில் ராகேஷ்வர் சிங்கின் வீடு உள்ளது. இந்நிலையில் அவர் பத்திரமாக விடுவிக்கப்படுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டதற்காக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சத்தீஸ்கர் அரசுக்கு ராகேஷ்வரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

ராகேஷ்வரின் மனைவி மீனு கூறும்போது, “எனது மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை. விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் எவ்வாறுவிடுவிக்கப்பட்டாரோ அதுபோலஎனது கணவர் விடுவிக்கப்பட்டுள்ளார்” என்றார்.

ராகேஷ்வரின் தாய் கண்ணீருடன் கூறும்போது, “எனது மகனின்வருகைக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம். இது எங்களுக்குதீபாவளி போன்றது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

இந்தியா

2 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்