ஒரே நாளில்  30 லட்சம் கரோனா தடுப்பூசி: 9 கோடியை கடந்த மொத்த எண்ணிக்கை

By செய்திப்பிரிவு

உலகளாவிய பெருந்தொற்றுக்கு எதிரான இந்தியாவின் ஒருங்கிணைந்த போரில் இன்னுமொரு முக்கிய மைல்கல்லாக, இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளின் எண்ணிக்கை 9 கோடியை கடந்தது.

இந்த வருடம் ஜனவரி மாதம் 16-ம் தேதியன்று தொடங்கப்பட்ட உலகின் மாபெரும் தடுப்பு மருந்து வழங்கும் திட்டத்தின் கீழ், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.

நேற்று காலை 7 மணி அளவிலான தற்காலிக அறிக்கையின் படி, 13,77,304 அமர்வுகளில் 9,01,98,673 தடுப்பு மருந்து டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 89,68,151 சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் டோஸ் மற்றும் 54,18,084 சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் டோஸ், 97,67,538 முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் டோஸ், 44,11,609 முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம் டோஸ், 60 வயதுக்கு மேற்பட்ட 3,63,32,851 பயனாளிகளுக்கு முதல் டோஸ், 60 வயதுக்கு மேற்பட்ட 11,39,291 பயனாளிகளுக்கு இரண்டாம் டோஸ், 45 வயதுக்கு மேற்பட்ட 2,36,94,487 பயனாளிகளுக்கு முதல் டோஸ் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட 4,66,662 பயனாளிகளுக்கு இரண்டாம் டோஸ் அடங்கும்.

நாட்டில் இதுவரை வழங்கப்பட்டுள்ள தடுப்பு மருந்துகளில் 60 சதவீதம் 8 மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளது. தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையில் 82-ம் நாளன்று (2021 ஏப்ரல் 7) 29,79,292 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் 38,760 பேருக்கு முதல் டோஸூம், 2,89,261 பேருக்கு இரண்டாம் டோஸும் போடப்பட்டது.

சர்வதேச அளவில் தினமும் போடப்படும் தடுப்பூசிகளின் சராசரி விகிதத்தின் படி ஒரு நாளைக்கு 34,30,502 தடுப்பூசிகள் என்ற அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்