ராணுவத்தின் மேற்கு பிரிவு தளபதியாக மஞ்சிந்தர் சிங் பொறுப்பேற்பு

By செய்திப்பிரிவு

ராணுவத்தின் மேற்கு பிரிவு தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தர் சிங், ஹரியாணா மாநிலம் சந்திமந்திரில் உள்ள தலைமயகத்தில் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவிடமான வீர் சம்ரிதியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மஞ்சிந்தர் சிங், பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள சைனிக் பள்ளி மற்றும் உத்தராகண்டின் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தில் (ஐஎம்ஏ) பயின்றவர் ஆவார். இவர் கடந்த 1986-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி, 19 மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் முதன் முதலாக பணியில் சேர்ந்தார். கடந்த 34 ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

நாட்டுக்காக ஆற்றிய சிறப்பான பணிக்காக, இவருக்கு யூத் சேவா மெடல் (2015) மற்றும் வஷிஸ்ட் சேவா மெடல் (2019) ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்