திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் திருடிய இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் ரூ.30 ஆயிரம் திருடிய இளைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தற்போது தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தினமும் சுமார் ரூ.3 கோடி வரை உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை உண்டியலில் ரூ.5 கோடி காணிக்கை செலுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பக்தர்கள் சுவாமியை தரிசித்து விட்டு உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது வரிசையில் இருந்த இளைஞர் ஒருவர் உண்டியலில் பணத்தை போடுவது போல் நடித்து, உண்டியலில் இருந்த ரூ.30 ஆயிரத்தை எடுத்துச்செல்ல முயன்றார். இதை கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்த விஜிலென்ஸ் அதிகாரிகள் உடனடியாக அந்த இளைஞரை பிடித்து திருமலை முதலாவது காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

5 mins ago

சினிமா

8 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

6 mins ago

சினிமா

24 mins ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

தமிழகம்

18 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

32 mins ago

வலைஞர் பக்கம்

36 mins ago

சினிமா

41 mins ago

சினிமா

46 mins ago

மேலும்