வாசிப்பை ஊக்குவிக்க பூங்காவில் நூலகம்: ஒடிசா அரசின் புதிய முயற்சி

By செய்திப்பிரிவு

ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் நகர மேம்பாட்டுக்காக மாநில அரசு சார்பில் கடந்த 1983-ல் புவனேஸ்வர் மேம்பாட்டு ஆணையம் (பிடிஏ) உருவாக்கப் பட்டது. இந்த ஆணையமும் பாகுல் அறக்கட்டளையும் இணைந்து புவனேஸ்வரின் பிஜு பட்நாயக் பூங்காவில் புதிதாக நூலகத்தை அமைத்துள்ளன. இந்த நூலகம் நேற்று திறக்கப்பட்டது.

நூலகத்தின் மையப்பகுதியில் அலமாரிகளுடன் பெரிய நூலக அறை கட்டப்பட்டுள்ளது. பூங்கா முழுவதும் ஆங்காங்கே சிறிய அலமாரிகளில் புத்தகங் கள் அழகாக அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. பூங்காவுக்கு வரும் பொதுமக்கள், பயனுள்ள புத்தகங் களை எடுத்து படிக்கலாம்.

நூலகத்தை திறந்துவைத்த ஒடிசா முதல்வரின் தலைமை ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

இணையதளம், சமூக வலைதளங்களில் மூழ்கியுள்ள இளைஞர்களிடம் வாசிப்பு வழக்கம் குறைந்து வருகிறது. வாசிப்பை ஊக்குவிக்க பூங்காவில் நூலகத்தை அமைத்துள்ளோம். இது ஒடிசாவின் முதல் பூங்கா நூலகமாகும்.

காலை 7 மணி முதல் 10 மணி வரையும், மாலையில் 4 மணி முதல் இரவு 7 மணி வரையும் பூங்கா திறந்திருக்கும். இந்த நேரத்தில் நூலகமும் செயல்படும். புவனேஸ்வரின் இதர முக்கிய பூங்காக்களிலும் இதேபோல நூலகத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

35 mins ago

ஜோதிடம்

32 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்