மேற்குவங்கத்தில் பாஜக சார்பில் போட்டியிட ஷிகா மித்ரா மறுப்பு

By செய்திப்பிரிவு

மேற்கு வங்க முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ராவின் மனைவி ஷிகா மித்ரா. பாஜகவில் இணையுமாறு சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு அழைப்பு வந்துள்ளது. ஆனால், அதை ஏற்க ஷிகா மறுத்துவிட்டார்.

இந்நிலையில் மேற்கு வங்க தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து பிரச்சாரம் சூடுபிடித் துள்ளது. பாஜக சார்பில் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு விட்டது. இதில் சவுரிங்கி தொகுதியில் பாஜக சார்பில் ஷிகா மித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது காங்கிரஸாருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் மிகவும் கோபமடைந்துள்ளார் ஷிகா மித்ரா.

இதுகுறித்து செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:

சில மாதங்களுக்கு முன்பு என்னைப் பாஜகவில் சேருமாறு கேட்டனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன். தற்போது என் பெயரை பாஜக வேட் பாளர் பட்டியலில் சேர்த்து அறி வித்துள்ளனர். இதனிடையே சில வாரங்களுக்கு முன்பு திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி என்னை சந்தித்து பாஜகவில் இணையுமாறு கேட்டார். அப்போதும் நான் மறுத்துவிட்டேன்.

தற்போது ஏன் என் பெயரை பட்டியலில் சேர்த்தார்கள் என்று தெரியவில்லை. இது எனக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி யுள்ளது. எங்கள் கட்சியிலிருந்து முற்றிலும் மாறுபட்டது பாஜக. அந்தக் கட்சியில் நான் எப்படி இணைவேன்? நான் அந்தக் கட்சி சார்பில் போட்டியிட மாட்டேன். அந்தக் கட்சித் தலைவர்கள் அறிவை இழந்துவிட்டனர் என்று நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மாலா சாஹாவின் கணவர் பெயரையும், பாஜக வேட்பாளர் பட்டியலில் சேர்த்துள்ளனர். ஆனால் அவரும் பாஜக சார்பில் போட்டியிட மறுத்துவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

உலகம்

10 hours ago

ஆன்மிகம்

10 hours ago

மேலும்