இந்துவாக மதம் மாறும்வரை முஸ்லிம் பெண் - இந்து ஆணுக்கு நடந்த திருமணம் செல்லாது: பஞ்சாப், ஹரியாணா நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

இந்துவாக மதம் மாறும்வரை முஸ்லிம் பெண்ணுடன் இந்து ஆணுக்கு நடந்த திருமணம் செல்லாது என்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபைச் சேர்ந்த 18 வயது முஸ்லிம் பெண் ஒருவரும், 25 வயது இந்து ஆண் ஒருவரும் கடந்த ஜனவரி மாதம் 15-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணத்துக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்த னர். இதைத் தொடர்ந்து தங்களது உயிருக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி அவர்கள் அம்பாலா பகுதி மாவட்ட போலீஸ் எஸ்.பி.யிடம் தஞ்சம் புகுந்தனர். ஆனால் அங்கு எந்த நடவடிக்கையும் இல்லாததால் பாதுகாப்பு கோரி, தம்பதிகள் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை அண்மையில் விசாரித்த நீதிமன்றம் கூறியதாவது:

முஸ்லிமான மணப்பெண், இந்து ஆண் ஒருவரை திருமணம் செய்துகொண்டாலும் அந்தத் திருமணம் செல்லாது. அந்த முஸ்லிம் பெண் இந்துவாக மதம் மாறும் வரை அந்தத் திருமணம் செல்லுபடியாகாது.

இருந்தபோதும், அவர்கள் திருமண வயதை எட்டியிருப்பதால் அவர்களால் ஒருமித்த உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அவர் களுக்கு உரிய பாதுகாப்பை அம்பாலா எஸ்.பி. வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த மாதம் முஸ்லிம் சிறுமி ஒருவர் திருமணம் செய்து கொண்டது செல்லும் என்று பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. முஸ்லிம் மதச் சட்டப்படி முஸ்லிம் பெண் ஒருவர் பருவம் எய்திவிட்டால் அவர்கள் திருமணம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

க்ரைம்

22 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

46 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்