ரூ. 77 ஆயிரம் கோடிக்கு 4ஜி அலைக்கற்றை ஏலம்: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏலத்தில் முன்னிலை

By செய்திப்பிரிவு

தொலைதொடர்பு சேவைக்கான அலைக்கற்றை ஏலத்தை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நடத்துகிறது மத்திய அரசு. இந்த ஏலத்தில் தொலைதொடர்பு நிறுவனங்கள் ரூ.77,814 கோடி மதிப்பிலான அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன. இதில் ரிலையன்ஸ் ஜியோ ரூ.57,122 கோடிக்கு அலைக்கற்றையை வாங்கி ஏலத்தில் முன்னிலை நிறுவனமாக உள்ளது. ஏர்டெல் ரூ.18,699 கோடிக்கும், வோடபோன் 1,993.40 கோடிக்கும் அலைக்கற்றைகளை ஏலத்தில் எடுத்துள்ளன.

கடந்த 2016ல் நடந்த அலைக்கற்றை ஏலத்தில் ஏழு நிறுவனங்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது மார்ச் 1ம் தேதி தொடங்கியுள்ள அலைக்கற்றை ஏலத்தில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மட்டுமே கலந்துகொண்டன. மேலும் இந்த ஏலத்தில் 5ஜிஅலைக்கற்றைகள் ஏலத்தில்இடம்பெறும் என எதிர்பார்த்தநிலையில் 4ஜி அலைக்கற்றைகள் மட்டுமே இடம்பெற்றன.

ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்ட இந்த ஏலம் இரண்டு நாட்கள் நடந்தது. 6 சுற்றுகளாக நடத்தப்பட்ட ஏலம் நேற்று மதியம் 12.45 மணியளவில் முடிந்ததாகதொலைதொடர்புத் துறை செயலர் அன்ஷு பிரகாஷ் கூறினார். குறிப்பாக 700, 800, 900, 1800, 2100, 2300, மற்றும் 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் ஏலத்தில் விற்கப்பட்டன. இதில் 700 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை. இவை இரண்டு தவிர்த்து பிற மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றைகள் 60 சதவீதம் ஏலத்தில் எடுக்கப்பட்டன. மொத்தமாக ஏலத்துக்காக ஒதுக்கப்பட்ட 2308.80 மெகா ஹெர்ட்ஸ்அலைக்கற்றையில் ஏலத்தில்எடுக்கப்பட்ட அலைக்கற்றைகளின் அளவு 855.60 மெகா ஹெர்ட்ஸ் ஆகும்.

ஏலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான அலைக்கற்றைகள் விற்கப்படும் என அரசு எதிர்பார்த்தது. ஆனால், எதிர்பார்ப்பைவிட அதிகமாகவே ஏலத்தில் விற்கப்பட்டதாக தொலைதொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஏலத்துக்கான எர்னெஸ்ட் டெபாசிட்டாக ஜியோ ரூ.10 ஆயிரம் கோடியும், ஏர்டெல்ரூ.3 ஆயிரம் கோடியும் செலுத்தியுள்ளன. வோடபோன் நிறுவனம்ரூ.475 கோடி மட்டுமே செலுத்தியுள்ளது. இந்த ஏலத்தில் ஒதுக்கப்படும் அலைக்கற்றை மீது நிறுவனங்களுக்கு 20 வருட உரிமை அளிக்கப்படுவதாக அரசுஅறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. இந்த அலைக்கற்றை கள் மீது 3 சதவீதம் பயன்பாட்டுக்கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்