ராஜஸ்தானில் லோக் ஆயுக்தா, மதுவிலக்கு கோரி ஒரு மாதம் உண்ணாவிரதம் இருந்த முன்னாள் எம்எல்ஏ மரணம்

By செய்திப்பிரிவு

ராஜஸ்தானில் லோக் ஆயுக்தா, மதுவிலக்கு கோரி ஒரு மாதமாக உண்ணாவிரதம் இருந்த ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ குருஷரன் சாப்ரா (70) நேற்று மருத்துவ மனையில் உயிரிழந்தார்.

ராஜஸ்தானில் 1977 முதல் 1980 வரை ஜனதா தள எம்எல்ஏவாக இருந்தவர் குருஷரன் சாப்ரா. பின்னர் பாஜகவில் இணைந்த சாப்ரா 1992-ல் தீவிர அரசியலில் இருந்து விலகினார். எனினும் சமூகப் பிரச்சினைகளுக்காக போராடி வந்தார்.

ராஜஸ்தானில் முதல்வர் பதவி யையும் உட்படுத்தி வலுவான, சுதந்திரமான லோக் ஆயுக்தா ஏற் படுத்த வேண்டும், மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி குருஷரன் சாப்ரா தொடர் உண்ணாவிரதம் தொடங்கினார். கோரிக்கைகளை பரிசீலிப்பதாக அரசு உறுதி அளித்ததால் மே 15-ம் தேதி தனது போராட்டத்தை முடித்துக்கொண்டார்.

அரசு நடவடிக்கை எடுக்காத தால், கடந்த அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மீண்டும் தொடர் உண்ணாவிரதம் தொடங்கி னார். இந்நிலையில் சாப்ராவின் உடல்நிலை மோசம் அடைந்ததால் கடந்த 17-ம் தேதி ஜெய்ப்பூர் எஸ்எம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ மனையிலும் போராட்டத்தை தொடர்ந்தார். இந்நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.

சாப்ராவின் மறைவுக்குப் பிறகு அவரது வீட்டுக்கு பாஜக அமைச்சர்கள் ராஜேந்திர சிங் ரத்தோர், அருண் சதுர்வேதி ஆகி யோர் சென்றனர். ஆனால் அவர் கள் மக்களின் கடும் எதிர்ப்புக்கு ஆளாகினர். சமூகப் பிரச்சினைக் காக போராடி வந்தவரை அரசு உதாசீனப்படுத்திவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர்.

இதனிடையே சாப்ராவின் மறைவுக்கு வசுந்தரா ராஜே அரசே காரணம் என்று மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் குற்றம் சாட்டினார். மேலும் பல்வேறு கட்சிகள், சமூக நல அமைப்புகள், மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. சாப்ராவின் கோரிக்கைகளுக்காக பல்வேறு அமைப்புகளுடன் சேர்ந்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் அறிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்