பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.13 லட்சம் கோடி

By செய்திப்பிரிவு

பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலம் ரூ.1.13 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித் துள்ளது. தொடர்ந்து 5-வது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளது குறிப்பிடத் தக்கது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வசூலான தொகை யுடன் ஒப்பிடுகையில் இது 7 சதவீதம் அதிகம்.

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முடங்கிப்போன தொழில்துறைகளை ஊக்குவிக்க அரசு எடுத்த பல்வேறு கட்ட ஊக்குவிப்பு சலுகைகள் மூலம் நிலைமை படிப்படியாக மீண்டு வருவதை ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு உணர்த்துவதாக நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இறக்குமதி வருவாய் மூலமான வரி 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலான தொகையை விட 5 சதவீதம் அதிகமாகும். புத்தாண்டு ஜனவரியில் மிக அதிகபட்சமாக ஜிஎஸ்டி வசூல் 1.20 லட்சம் கோடியை எட்டியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2020 டிசம்பரில் மிக அதிகபட்சமாக வசூலான தொகை ரூ. 1,15,174 கோடியாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

55 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்