ஹோஷாங்கபாத் நகரின் பெயர் மாறுகிறது

By செய்திப்பிரிவு

ம.பி.யின் ஹோஷாங்கபாத் நகரில் நடைபெற்ற நர்மதா ஜெயந்தி விழாவில் முதல்வர் சிவராஜ் சவுகான் பங்கேற்றார்.

அப்போது, “ஹோஷாங்கபாத் நகரின் பெயரை மாற்ற வேண்டுமா?” என மக்களிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள் “ஆமாம்” என்றனர். உடனே, “புதிய பெயர் என்னவாக இருக்க வேண்டும்?” என சவுகான் மீண்டும் கேள்வி எழுப்பினார். இதற்கு மக்கள், “நர்மதாபுரம்” என்றனர்.

இதையடுத்து முதல்வர் சவுகான், “ஹோஷாங்கபாத் நகரின்பெயர் நர்மதாபுரம் என மாற்றப்படும். இது தொடர்பாக மத்திய அரசுக்கு பரிந்துரை அனுப்பி வைக்கப்படும்” என்றார்.

நிகழ்ச்சியில் சவுகான் மேலும்பேசும்போது, “நர்மதை நதிக்கரையில் அமைந்துள்ள அனைத்து நகரங்களிலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். நர்மதை நதிக்கரையில் கான்கிரீட் கட்டிடங்கள் கட்ட மாநில அரசு அனுமதிக்காது” என்றார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்த பெயர் மாற்ற அறிவிப்பை முதல்வர் வெளியிட்டுள்ளதாக சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகர் ராமேஷ்வர் சர்மா கூறினார்.

அவரது தலைமையில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து இதனை கொண்டாடினர்.

பெயர் மாற்ற அறிவிப்பு குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் புபேந்திர குப்தா கூறும்போது, “விலைவாசி உயர்வு, எரிபொருள் விலையேற்றம் போன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இந்த அறிவிப்பை சவுகான் வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலாக வளர்ச்சிப் பணிகளில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் கவலைகளை போக்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தொழில்நுட்பம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்