சிபிஎம் கட்சிக்கு 2019-20 இல் ரூ.19 கோடி நன்கொடை;  திமுக சார்பில் ரூ.10 கோடி பெற்றதாகவும் தகவல்

By ஆர்.ஷபிமுன்னா

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி (சிபிஎம்) கடந்த ஆண்டு 2019-20 இல் சுமார் 19 கோடி ரூபாய் நன்கொடை பெற்றுள்ளது. இதில் ரூ.10 கோடியை திமுக சார்பில் அளிக்கப்பட்ட தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிபிஎம் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தம் கட்சியின் வரவு செலவு மீதான கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில், தம் கட்சிக்காக பெறப்பட்ட நன்கொடையின் விவரங்களும் இடம் பெற்றுள்ளன.

இதன்படி, கட்சிக்கு கடந்த 2019-20 ஆண்டில் ரூ.19,69,36,150 (19 கோடியே 69 லட்சத்து 36 ஆயிரத்து 150 ரூபாய்) நன்கொடையாகக் கிடைத்துள்ளது. இதன் பெரும்பாலானத் தொகை திமுகவிடம் இருந்து சிபிஎம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த மக்களவை தேர்தல் சமயத்தில் சிபிஎம் கட்சிக்காக திமுக சார்பில் ரூ.10 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனது மற்ற கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவர்களுக்கும் திமுக நன்கொடை அளித்திருந்தது.

இந்த தகவல் மக்களவை தேர்தலுக்கு பிறகு மத்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் வெளியாகி இருந்தது. இதற்கு திமுகவும் அதனிடம் நன்கொடை பெற்ற கூட்டணிக் கட்சிகளும் விளக்கம் அளித்திருந்தனர்.

இதுபோல், ஒரு அரசியல் கட்சி தமது கூட்டணியில் இணைந்து போட்டியிடுபவர்களுக்கு நன்கொடை அளிப்பது புதிதல்ல. எனினும், இது வங்கி பரிவர்த்தனை மூலமாக அளிப்பதால் அதிக வெளிப்படையாக தெரிந்து விடுவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்