டூல்கிட் பகிர்ந்த வழக்கு: வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப்பை கைது செய்ய இடைக்கால தடை

By செய்திப்பிரிவு

வேளாண் சட்டங்களுக்கு ஆதரவுதெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, சர்வதேச சுற்றுச்சூழல் ஆர்வலர், கிரெட்டா தன்பெர்க் ட்விட்டரில் டூல்கிட் என்ற ஆன்லைன் ஆவணத்தை பதிவு செய்தார். அதை பெங்களூருவைச் சேர்ந்த திஷா ரவி, மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர் நிகிதா ஜேக்கப், அவரது ஆதரவாளர் சாந்தனு முலுக் போன்றோர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக டெல்லி சைபர் கிரைம் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் திஷா ரவி கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் உள்ளார்.

இதனிடையே, இந்த வழக்கில் டெல்லி போலீஸார் தனக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளதால், டெல்லி நீதிமன்றம் சென்று முன்ஜாமீன் பெறுவதற்குள் தன்னை கைது செய்துவிடக் கூடாது. 4 வாரங்கள் சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரி நிகிதா மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், நிகிதாவை 3 வாரங்கள் கைது செய்யக்கூடாது என டிரான்சிட் முன்ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 mins ago

கருத்துப் பேழை

10 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்