டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்தது மத்திய அரசு

By செய்திப்பிரிவு

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகள் நிரந்தரமாகத் தடை செய்யப்படுவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப்பிரச்சினை காரணமாக, இந்த செயலிகளுக்கு கடந்தஆண்டு ஜூன் மாதம் இந்திய அரசு தற்காலிக தடைவிதித்தது. அதன் பிறகு தடைசெய்யப்பட்ட செயலிகள்சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் பயனாளர்களின் தகவல்கள் எப்படி சேகரிக்கப்படுகின்றன என்ற விவரங்களை அரசு கேட்டிருந்தது. இதுதொடர்பாக அந்நிறுவனங்கள் வழங்கிய அறிக்கைகள் திருப்திகரமாக இல்லை என அரசு நோட்டீஸ் பிறப்பித்தது.

இதன் காரணமாக 59 சீன செயலிகளும் நிரந்தரமாகத் தடை செய்யப்பட்டவையாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதேசமயம் தடை செய்யப்பட்ட பப்ஜி கேம்செயலி முழுக்க முழுக்க இந்திய வெர்சனாக உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது சீன செயலிகள் நிரந்தர தடை என்ற நடவடிக்கைக்குப் பிறகு இந்த பப்ஜி மீண்டும் பயன்பாட்டுக்கு வருவதும் கேள்விக்குறியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்