சைக்கிளில் தந்தையை 1,200 கி.மீ. தூரம் அழைத்துச் சென்ற சிறுமிக்கு மோடி பாராட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஜோதிகுமாரி ஹரியாணாவில் தனது தந்தையுடன் வசித்து வந்தார். கரோனா காலத்தில் வேலைவாய்ப்பை இழந்த ஜோதிகுமாரியின் தந்தை பிஹாரில் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு செல்ல முடிவு செய்தார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. கையிலும் பணம் இல்லை. கரோனாவால் போக்குவரத்தும் முடங்கிய நிலையில், தனது தந்தையை ஹரியாணாவில் இருந்து பிஹாரில் உள்ள சொந்த கிராமத்துக்கு சைக்களில் பின்னால் உட்கார வைத்து 1,200 கி.மீ. தூரத்தை 7 நாள் பயணித்து அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், கல்வி, கலை, வீரதீரச் செயல் உள்ளிட்டவற்றுக்காக ஆண்டுதோறும் சிறுவர், சிறுமிகளுக்கு வழங்கப்படும் பால புரஸ்கார் விருதுக்கு தேர்வான 32 பேரில் ஜோதி குமாரியும் இந்த ஆண்டு விருதுக்கு தேர்வானார். இதுகுறித்து பிரதமர் மோடி ட்வி்ட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘உடல் நலமில்லாத தனது தந்தையை சைக்களில் 1,200 கி.மீ. தூரம் அழைத்துச் சென்ற ஜோதிகுமாரியை பாராட்டுகிறேன். தனது வயதையொத்த மற்ற சிறுமிகளைப் போல அவர் தோற்றமளிக்கலாம். ஆனால், தனது துணிச்சலையும், வலிமையையும் ஜோதிகுமாரி காட்டிய விதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

4 mins ago

இணைப்பிதழ்கள்

15 mins ago

தமிழகம்

26 mins ago

சினிமா

44 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

மேலும்