ராமர் கோயில் கட்ட கவுதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

By செய்திப்பிரிவு

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. ராமர் கோயில் கட்டுவதற்கு நாடு முழுவதும் நிதி திரட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. கடந்த 15-ம் தேதியன்று அறக்கட்டளை சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் இருந்து முதலில் நிதி பெறப்பட்டது. அவர் ரூ.5 லட்சத்து 100 நன்கொடை அளித்தார்.

இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லி தொகுதி பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர், ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1 கோடி நிதி அளித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘அயோத்தியில் நீண்டகால பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது. அங்கு பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியரின் கனவாகும். இது ஒற்றுமைக்கும் அமைதிக்குமான பாதையை ஏற்படுத்தும்’’ என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 mins ago

சினிமா

9 mins ago

சினிமா

14 mins ago

இந்தியா

22 mins ago

க்ரைம்

19 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

54 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

மேலும்