சென்னை உட்பட 8 இடங்களில் இருந்து படேல் சிலை உள்ள கெவாடியாவுக்கு புதிய ரயில்கள்: பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

By ஏஎன்ஐ

சென்னை உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைந்துள்ள கெவாடியாவுக்கு 8 புதிய ரயில்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

நாட்டின் பல பகுதியிலிருந்து குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலைக்கு 8 ரயில்களை இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த ரயில்கள் ஒற்றுமை சிலைக்கு தடையற்ற போக்குவரத்து இணைப்பை வழங்கும். இந்நிகழ்ச்சியின் போது, குஜராத்தில் ரயில்வே துறை தொடர்பான பல திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியின் போது, குஜராத் முதல்வர் மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

பிரதமரால் தொடங்கி வைக்கப்படவுள்ள ரயில்களின் விவரம்:

1. கெவாடியாவிலிருந்து - வாரணாசி செல்லும் மஹாமனா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் (09103/04)

2. தாதர் - கெவாடியா எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் (02927/28)

3. அகமதாபாத்திலிருந்து கெவாடியா செல்லும் ஜன்சதாப்தி எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் (09247/48)

4. கெவாடியா - எச்.நிஜாமுதீன், நிஜாமுதீன் - கெவாடியா சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் வாரம் இருமுறை ரயில் (09145/46)

5. கெவாடியா - ரெவா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் ( 09105/06)

6. சென்னை - கெவாடியா எக்ஸ்பிரஸ் வாராந்திர ரயில் (09119/20)

7. பிரதாப் நகர் - கெவாடியா தினசரி மின்சார ரயில் (09107/08)

8. கெவாடியா - பிரதாப் நகர் தினசரி மின்சார ரயில் (09109/10)

ரயில் சேவையைத் தொடங்கிவைத்து பிரதமர் பேசியதாவது:

முதன்முதலில் கெவாடியாவை ஒரு சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்ற திட்டம் முன்வைக்கப்பட்டபோது, குறுகிய காலத்தில் இதை செயல்படுத்த முடியாது என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அப்போது, கெவாடியாவுக்கு சரியான சாலை வசதி இல்லை. ரயில் போக்குவரத்தும் இல்லை. இந்தியாவின் பிறபகுதிகளில் உள்ள குக்கிராமம் போலவே கெவாடியாவும் இருந்தது.
ஆனால், இன்று ஒரு சில ஆண்டுகளிலேயே கெவாடியா முற்றிலுமாக மாறியுள்ளது. சாலை வசதி மேம்படுத்தப்பட்டது. ரயில் சேவை விடப்பட்டுள்ளது. நாட்டின் 8 பகுதிகளில் இருந்து கெவாடியாவுக்கு தொடங்கப்பட்டுள்ள இந்த ரயில் சேவை இன்னும் சில ஆண்டுகளில் இப்பகுதியை சர்வதேச சுற்றுலாத் தலமாக மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை. சரியான திட்டமிடல் இருந்தால் எந்த இடத்தின் சூழலையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

16 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

53 mins ago

இந்தியா

57 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்