60 விவசாயிகள் உயிரிழப்பு; தர்மசங்கடம் இல்லையா- மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கேள்வி

By செய்திப்பிரிவு

போராட்டத்தின்போது 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தது மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லையா என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின்போது பல்வேறு காரணங்களால் 60 பேர் உயிரிழந்தனர். மேலும் குடியரசு தினத்தில் டெல்லியை நோக்கி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே, இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “குடியரசு தின பேரணி நடைபெறும் நாளில் டிராக்டர் பேரணி நடத்தி இடையூறு ஏற்படுத்தினால் அது நம் நாட்டுக்கு தர்மசங்கடமாக இருக்கும்” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “போராட்டத்தின்போது 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தது மத்திய அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் டிராக்டர் பேரணியால் மோடி தலைமையிலான அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும்” என பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

க்ரைம்

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

க்ரைம்

6 hours ago

இந்தியா

6 hours ago

சினிமா

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

மேலும்