2020-21 நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.7% ஆக சரியும் என கணிப்பு

By செய்திப்பிரிவு

நடப்பு நிதியாண்டில் இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியானது மைனஸ் 7.7 சதவீதமாக சரியும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நடப்பு 2020 -21 நிதியாண்டில் எதிர்பாராதவிதமாக கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஊரடங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. இது இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சியில் வெகுவாக எதிரொலித்துள்ளது. முதல் காலண்டில் மைனஸ் 23.9 சதவீத சரிவைச் சந்தித்தது. இரண்டாம் காலாண்டில் சற்று மீண்டு வந்த ஜிடிபி மைனஸ் 7.5 சதவீதமாகப் பதிவானது.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான முதல் ஜிடிபி கணிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி நடப்பு நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியானது மைனஸ் 7.7 சதவீதம் சரிவை காணலாம் எனக் கூறியுள்ளது. 2019-20 நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சியானது 4.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் அறிக்கையின்படி, பொருளாதாரத்தின் அத்தனை துறைகளும் கரோனா நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதில் தப்பித்த ஒரே துறை வேளாண் துறை மட்டுமே. மேலும் உற்பத்தித் துறை நடப்பாண்டில் மைனஸ் 9.4 சதவீதம் சரிவை சந்திக்கும் எனவும் அது கணித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜிடிபி குறித்த மூன்றாம் காலாண்டு ஜிடிபி விவரம் பிப்ரவரி 26-ல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்