பிரதமர் நரேந்திர மோடி அரசால் வடகிழக்கு வளர்கிறது: மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

By செய்திப்பிரிவு

வடகிழக்கில் உள்ள அசாம் மாநிலத்தில் வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அசாமின் குவாஹாட்டியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

கடந்த பல ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் பல்வேறு போராட்டங்கள் தொடர்கதையாக நீடித்தன. இதன் காரணமாக மாநிலத்தின் அமைதி, வளர்ச்சி பாதிக்கப்பட்டது. பிரிவினைவாத குழுக்கள் தலைதூக்கின. இவற்றில் இணைந்த இளைஞர்கள் ஆயுதங்களை கையில் எடுத்தனர்.

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக இளைஞர்கள் தீவிரவாதத்தை கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்பியுள்ளனர்.

மோடி ஆட்சியில் இந்திய,வங்கதேச எல்லை ஒப்பந்தம்கையெழுத்தாகி உள்ளது. மணிப்பூர் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. புரூ-ரியாங் அகதிகள் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

போடோலாந்து உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் 80 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். தேர்தலில் சிறு அசாம்பாவிதம்கூட ஏற்படவில்லை. வடகிழக்கில் அமைதியை நிலைநாட்டவும் வளர்ச்சித் திட்டங்களை முடுக்கிவிடவும் பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அசாமில் முதல்வர் சர்வானந்த சோனோவால், நல்லாட்சி நடத்திவருகிறார். அவரது தலைமையில்மாநிலத்தில் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட் டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

5 mins ago

இந்தியா

28 mins ago

விளையாட்டு

20 mins ago

இந்தியா

28 mins ago

தமிழகம்

53 mins ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

மேலும்