கர்நாடகாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

By இரா.வினோத்

கர்நாடக மாநில தலைமைச் செயலர் விஜயபாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கர்நாடகாவில் கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த மாதத்தை காட்டிலும் தற்போது சற்று குறைந்துள்ளது. எனினும் டிசம்பர் இறுதியில் அல்லது ஜனவரியில் 2-வது அலை வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தசரா, தீபாவளி பண்டிகைகளைப் போலவே வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளுக்கும் மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்ப்ப‌து, வாழ்த்தும் போது கை குலுக்குவதை தவிர்ப்பது, ஒருவரை ஒருவர் தழுவுவதை தவிர்ப்பது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை பின்பற்ற

குறிப்பாக வரும் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. உணவகம், கேளிக்கை விடுதிகள், விருந்து நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள், நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்த தடை விதிக்கப்படுகிறது. அரசின் இந்த உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

இந்தியா

13 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

மேலும்